இதையடுத்து கடைசி நாளில் மட்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில்,
* கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி - 2,06,657 பேர்
* கிராம ஊராட்சி தலைவர் பதவி - 54,747 பேர்
* ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி - 32,939 பேர்
* மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி - 3,992 பேர்
அடங்கும். இதையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதனை சம்பந்தப்பட்ட பகுதி தேர்தல் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கண்காணித்தனர். இதில் ஆட்சேபத்துக்குரிய மனு