மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்பதற்கு இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்,
உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தல் நடத்தும் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், மறைமுக தேர்தல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தை நாட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.