ஜிலின்-2 காவோபென் 02பி செயற்கைகோள் வெற்றிகரமாக அதன் சுற்றுபாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது
சீனாவின் சான்சி மாகாணத்தில் தையுவான் நகரில் உள்ள செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து சனிக்கிழமை காலை 10.55 மணி அளவில் 'ஜிலின்-2 காவோபென் 02பி' என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. 'கே.இசட்-1ஏ' (KZ-1A) என்ற ராக்கெட்டில் இது விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக அதன் சுற்றுபாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. இது ஏற்கனவே அனுப்பப்பட்ட 14 ஜிலின்-1 செயற்கைகோள்களுடன் இணைந்து ஒரு நெட்வொர்க்கை அமைத்து செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது
சாங் குவாங் செயற்கைகோள் தொழில்நுட்ப நிறுவனம் இந்த செயற்கைகோளை தயாரித்துள்ளது. இது ஆப்டிகல் ரிமோட் சென்சிங், அதிவேக தரவு பரிமாற்றம் போன்றவற்றுக்கு பயன்படும் வகையில் இந்த செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டுள்ளது.
இது விவசாயம், வனவியல், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சேவைகளை வழங்கவும் தரவு பரிமாற்றத்துக்கும் உதவிகரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.