சூரிய கண்ணாடி இல்லாமல் பாதுகாப்பாக சூரிய கிரகணத்தை பார்க்கும் முறைகள்

சூரிய கண்ணாடி இல்லாமல் பாதுகாப்பாக  சூரிய கிரகணத்தை பார்க்கும் முறைகள்


சூரிய கிரகணம் மாணவர்களுக்கு நேரடி விழிப்புணர்வு 


மோதிர வெளிச்சம் குறைவாகவே இருக்கும் 


பயம் தேவையில்லை - இயல்பாக இருங்கள் -


வெறும் கண்ணாலும், பைனாகுலரில் நேரடியாகவும் கிரகணத்தை பார்க்காதீர்கள் -


கல்லூரி மேனாள் முதல்வர் அறிவுரை


தேவகோட்டை-  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சூரிய கிரகணம் பார்க்கும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



          ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திரமோகன் மாணவர்களிடம் சூரிய கிரகம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில் ,தமிழ்நாட்டில் அற்புத சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 26-ம் தேதி வியாழக்கிழமை காலை 8.07 மணி முதல் காலை 11.16 வரை காணமுடியும். அன்றைய தினம் கோவை, ஊட்டி, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற இடங்களில் வானில் ஒரு அதிசய காட்சியைக் காணமுடியும். சூரியன் மிகப்பெரியது.


நாம் அதன் அருகில் சென்று பார்க்க முடியாது. பூமி சிறியது. சூரியன் மில்லியன் டிகிரி வெப்பநிலை கொண்டது.


சூரியனின் ஆற்றல் தாவரங்கள் மற்றும் மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் கிடைக்கிறது. தாவரங்கள் மூலம் உணவை உண்டு மனிதர்கள் ஆற்றலைப் பெறுகிறோம். நாம் உயிர் வாழ சூரியன் மிக அவசியம்.


சூரியனை கடவுளாக அந்தக் காலத்தில் வழிபட்டு வணங்கினர். சூரியனை ஒரு அறிவியல் கண்ணோட்டத்தில் காணவேண்டும் .