வாழ்க்கையைத் தொடராக வெளிச்சமிட்டுக் காட்டும் பணியை எம்எக்ஸ் பிளேயர் செய்து வருகிறது

பள்ளிப் பருவத்தில் ஜெயலலிதா படிப்பில் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது தான் அளித்த பேட்டியில், “பள்ளியின் சிறந்த மாணவி என்ற பட்டத்தைப் பெற்றதுதான் இப்போதுவரை எனது மனதில் சாதனையாக நிற்கிறது” எனக் கூறியிருந்தார்.

ஜெயலலிதா படிப்பில் மட்டுமல்ல, பாடல் பாடுவது, விளையாட்டு என அனைத்திலும் முதல் மாணவியாகவே இருந்து வந்துள்ளார். பள்ளியின் மாணவி தலைவராகவும் இருந்துள்ளார். ஜெயலலிதாவின் கனவு, ஏமாற்றம் எல்லாவற்றின் தொடக்கமும் அவரின் பள்ளி பருவமாகத்தான் இருந்துள்ளது.