தோழர் வேணுகோபால் அவர்களுடன் ஒரு சந்திப்பு

தோழர் வேணு கோபால் அவர்களை  பல ஆண்டுகளாக தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றோம். ஈமெயில் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் அவருடைய தொடர்புகள் இருந்து வருகின்றது .


சில ஆண்டுகளுக்கு முன்பாக புதிய தலைமுறை விருது பெற்ற பொழுது அவர் அந்த விருது விழாவிற்கு வந்திருந்தார். அப்பொழுது நேரில் சந்தித்தது தான் அதன் பிறகு அவரை சந்திக்க இயலவில்லை .இடையில் இரண்டு முறை சென்னை சென்றபோது அவரை தொடர்பு கொண்டும் சந்திக்க இயலவில்லை .இந்த முறை கடந்த 25 ஆம் தேதி அன்று அவர் பணி நிறைவு விழா வைத்து இருந்ததற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது வீட்டிற்குச் சென்றோம். மிக அருமையான வாய்ப்பு.


தோழர் வேணுகோபால் அவர்களும், அவரது மனைவி ,மகன்,மகள்,மருமகன் அனைவரும் எங்களை அன்புடன் வரவேற்று மிக அழகாக பேசினார்கள் .அருமையாக பேசினார்கள். அன்னாரின் மனைவி தோழர் ராஜேஸ்வரி  அவர்கள் பல்வேறு தகவல்களை எங்களுக்கு எடுத்துச் சொன்னார்கள் .


இன்றைய நிலையில் மக்களின் நிலை எப்படி இருக்கின்றது, சென்னையில் எங்கெல்லாம் பல்வேறு இடங்களை பார்க்கலாம் , அவர்கள் தலைமைச் செயலக ஊழியர்களின் உதவியுடன் என்னென்ன மாதிரியான சமூக நல உதவிகள் செய்து வருகின்றனர் ,இந்த சமுதாயத்திற்கு உதவக்கூடிய வகையில் பல்வேறு பணிகள் செய்வது தொடர்பாகவும் விளக்கமாக கூறினார்கள். அவர்களை சந்தித்ததும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது .தோழர் வேணு கோபால் அவர்கள் மகன் நந்து அவர்கள் எங்களுக்கு வேணுகோபால் அவர்களின் புத்தகங்களை வழங்கினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல்வேறு பணிகளுக்கு இடையில் தோழர் வேணுகோபால் அவர்கள் எங்களை சந்தித்ததை நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் கருதுகின்றோம்.வங்கி பணியில் 38 ஆண்டுகள் பணியாற்றி,பல தோழர்களுக்கு உதவி செய்துள்ள   தோழர் அவர்களின் பணி நிறைவு வாழ்க்கை இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள்


தோழமையுடன் 


.லெ .சொக்கலிங்கம், 


தலைமையாசிரியர், 


சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, 


தேவகோட்டை ,