தேசிய வாக்காளர் தின விழா
வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள்
1950 என்ற தொலைபேசி எண் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு மட்டுமே உரியது
ஆர்.டி.ஓ. பள்ளி மாணவர்களிடம் பேச்சு
வாக்காளர் தின ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றோர்க்கு ஆர்.டி.ஓ பரிசு வழங்குதல்
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கான கோலப்போட்டி களுடன்தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது .இப்பள்ளியில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார் .தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் செ .சங்கரநாராயணன் தலைமை தாங்கி பேசுகையில், 18 வயது நிரம்பிய அனைவரும் இளம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நான்கு வழிகளில் பெயர்களை சேர்க்கலாம் .முதலாவதாக ஆன்லைன் மூலமாகவும், இரண்டாவதாக ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாகவும் ,மூன்றாவதாக மாற்றுத்திறனாளிகள் 1950 என்ற எண்ணுக்கு போன் மூலமாகவும், நான்காவதாக படிவம் 6 கொடுத்து உங்களது பெயர்களை அவசியம் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் .
வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் பெயர் இருப்பதுடன் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்